இயற்கை பேரிடர் மற்றும் வன உயிரனங்களால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிக மிகக் குறைவு என்றும், இதனால் விவசாயத்தை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கோபி அருகே பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெள்ளியன்று இரவு பெய்த கன மழை மற்றும் சூறாவளிக் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர்,கா.கணபதிபாளையம், இந்திரா நகர்மற்றும் வன்னி மரத்துக்காடு பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.